தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பிரிவின் சார்பில் ஆணவப்படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் விஜய், மாவட்ட துணைத்தலைவர் பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அமுல்காஸ்ட்ரோ, வனரோஜா, சுந்தரலிங்கம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் ரவீந்திரன் நன்றி கூறினார்.