தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட குழு உறுப்பினர் வீரபத்திரன், ஒன்றிய செயலாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை உடனடியாக கைவிடக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட துணைத் தலைவர் வீரபத்திரன், பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் குமரன், அண்ணாமலை, பிரகலாதன், நதியா, கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story