தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்


தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2023 2:15 AM IST (Updated: 18 Aug 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஒட்டன்சத்திரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஒட்டன்சத்திரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னத்துரை, அவரது தங்கை தாக்கப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை செயலாளர் அருள்செல்வன் தலைமை தாங்கி பேசினார். இதில், மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட துணைத்தலைவர் முத்துசாமி, பொருளாளர் வனஜா, மாதர் சங்க மாநில செயலாளர் ராணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story