வ.புதுப்பட்டி கிராமத்தில் தீண்டாமை சுவர்
வ.புதுப்பட்டி கிராமத்தில் தீண்டாமை சுவரை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் அயோத்திதாசர் மாணவர்கள் அமைப்பை சேர்ந்த பிரகாஷ், கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
வத்திராயிருப்பு தாலுகா வ.புதுப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அரசு நிலத்தில் கோவில் கட்டி வழிபடுவதுடன் மீதி இடத்தில் தீண்டாமை சுவர் கட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் தலித் சமூகத்தின் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே இந்த தீண்டாமை சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் போராட்டம் நடத்திய பிரகாசை போலீசார் அழைத்துச் சென்றனர்.