அப்டேட் ஆயத்த ஆடைகள் விற்பனை ஷோரூம் திறப்பு விழா
அப்டேட் ஆயத்த ஆடைகள் விற்பனை ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
பெரம்பலூரில் தபால்நிலையத்தெருவில் மம்மிடாடி சாரீஸ் மற்றும் ஆயத்த ஆடைகள் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் மற்றொரு அங்கமாக அப்டேட் ஆயத்த ஆடைகள் விற்பனை ஷோரூம் தபால் நிலையத்தெருவில் மம்மிடாடி ஆயத்த ஆடைகள் ஷோரூம் எதிரே அமைக்கப்பட்டு அதன் திறப்புவிழா நேற்று நடந்தது. விழாவில் தமிழ்நாடு நகராட்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், திருச்சி தொழில் அதிபருமான கே.என்.அருண்நேரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய ஷோரூமை திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஷோரூம் உரிமையாளர்கள் புத்தாநத்தம் பி.பி.டி.ராஜாமுகம்மது-மெடிக்கல் முபாரக் சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். பெரம்பலூர் எம்.எல்.ஏ.பிரபாகரன், மாவட்ட அரசு காஜி அப்துல் சலாம் தாவுதி, டவுன் பள்ளிவாசல் தலைமை இமாம் முகம்மது சல்மான் அன்வாரி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொறுப்பாளர் கிட்டு, நகர்மன்ற கவுன்சிலர்கள் ரகமத்துல்லா, பாரி என்கிற பாரூக், பெரம்பலூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளர் முகம்மது பாருக், மாவட்ட கவுன்சிலர் மணப்பாறை பாலசுப்ரமணியன், அரிமா சங்க தலைவர் பாபு மற்றும் உலமா சபை நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், வர்த்தகபிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். திறப்புவிழா சலுகையாக ஒரு சட்டை வாங்கியவர்களுக்கு ஒரு டி-சர்ட் இலவசமாக வழங்கப்பட்டது.