'கியர்' சைக்கிள் அனுமதிக்கப்பட்டதால் சலசலப்பு


கியர் சைக்கிள் அனுமதிக்கப்பட்டதால் சலசலப்பு
x

‘கியர்’ சைக்கிள் அனுமதிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மாணவிகளுக்கு 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 5 கிலோ மீட்டர், 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 10 கிலோ மீட்டர், 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு போட்டிகள் நடைபெற்றன. இதேபோல் மாணவர்களுக்கான 3 பிரிவுகளில் 10, 20, 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கீழப்பழுவூர் - தஞ்சாவூர் சாலையில் போட்டி நடைபெற்றதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த போட்டிகளில் மொத்தம் 228 மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் கியர் சைக்கிள் இல்லாமல், சாதாரண சைக்கிள் பயன்படுத்த வேண்டும் என்றுபள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நேற்று போட்டியின்போது கியர் சைக்கிள்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது பற்றி நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் பகுதியை சேர்ந்தவர்கள், அதிகாரிகளிடம் முறையிட்டனர். அப்போது சாதாரண சைக்கிளில் பங்கேற்க வேண்டும் என்று கூறிவிட்டு, தற்போது கியர் சைக்கிள்களை அனுமதிப்பது மாணவ- மாணவிகளின் வெற்றி தோல்வியை மாற்றி அமைக்கும் என்றும் அவர்கள் கூறினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் முறையாக புகார் எழுதி கொடுக்குமாறு கூறப்பட்டது. பின்னர் போட்டிகள் தொடங்கின. இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


Next Story