யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 233 பேர் எழுதினர்


யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 233 பேர் எழுதினர்
x

அரியலூர் மாவட்டத்தில் 233 போ் எழுதினர். 140 பேர் தேர்வு எழுதவில்லை.

அரியலூர்

யு.பி.எஸ்.சி. தேர்வு

`நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத தயாராகும் தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புடன் தலா ரூ.7,500 வீதம் 10 மாதம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

மேலும் ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தில் பயன்பெற அரியலூர் மாவட்டத்தில் 373 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான தேர்வு மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது.

கலெக்டர் ஆய்வு

இந்த தேர்வினை 233 பேர் எழுதினர். 140 பேர் தேர்வு எழுத வரவில்லை. அரியலூரில் நடந்த தேர்வினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் இத்தேர்வினை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.


Next Story