யு.பி.எஸ்.சி குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது..!
யு.பி.எஸ்.சி குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,
இந்திய குடிமைப்பணிகளுக்கான 2023 ஆம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஆகிய 5 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 7 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
9.30 முதல் 11.30 மணி வரை பொதுஅறிவு தேர்வு, பிற்பகல் 2.30-4.30 வரை திறனறிவு தேர்வு, 2 ஆம் தாள் தேர்வும் நடக்கிறது. மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 1,105 பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது.
Related Tags :
Next Story