நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மக்களுக்கான சங்கம் அமைக்கப்பட வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
சங்கம் உருவாக்கி அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
சென்னை,
சென்னை யானைகவுனி பகுதியில் அமைந்துள்ள கல்யாணபுரத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 44.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 புதிய குடியிருப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போர் நல சங்கம் இருப்பதைப்போன்று, பொதுமக்கள் ஒரு சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் தேவைகளை மாநகராட்சிக்கு தெரிவித்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Related Tags :
Next Story