பள்ளி நேரங்களில் பெண்களுக்கான நகர பஸ்களை அதிகரிக்க வலியுறுத்தல்


பள்ளி நேரங்களில் பெண்களுக்கான நகர பஸ்களை அதிகரிக்க வலியுறுத்தல்
x

பள்ளி நேரங்களில் பெண்களுக்கான நகர பஸ்களை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட இளம்பெண்கள் மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டக்குழு உறுப்பினர் கஸ்தூரி தலைமை தாங்கினார். மாநாட்டில் பள்ளி நேரங்களில் பெண்களுக்கான நகர பஸ்களை அதிகரிக்க வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உள் புகார் கமிட்டி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story