பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்


பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்
x

பெரம்பலூரில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவரும், முன்னாள் ராணுவ அலுவலருமான பெரியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் பால் உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளதால், பெரம்பலூரில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் புதிதாக தொடங்க வேண்டும். நகர் ஊரமைப்பு அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால், நிரந்தர கட்டிடத்தில் செயல்படும் வகையில் புதிதாக அலுவலகம் கட்டித்தர வேண்டும். மாவட்ட மைய நூலகத்தில் முழுமையாக சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்க வேண்டும். பெரம்பலூர் வருவாய் கோட்டத்தை 2 ஆக பிரித்து குன்னத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும். தாலுகா தலைநகரான குன்னம் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவக்குமார், பொருளாளர் வெங்கடாசலம், மாவட்ட ஆலோசகரும், பன்னாட்டு ஜேசீஸ் சங்கத்தின் பயிற்சியாளருமான வைரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story