பெரம்பலூர் வழியாக ரெயில் பாதை அமைக்கும் பணிகளை தொடங்க வலியுறுத்தல்


பெரம்பலூர் வழியாக ரெயில் பாதை அமைக்கும் பணிகளை தொடங்க வலியுறுத்தல்
x

பெரம்பலூர் வழியாக ரெயில் பாதை அமைக்கும் பணிகளை தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் ஆலோசனை கூட்டம், மாநில துணை தலைவரும், ஓய்வுபெற்ற ராணுவ அலுவலருமான பெரியசாமி தலைமையில் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான ரெயில்வே நிலையம் அமைக்கும் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து கும்பகோணம், திருவையாறு, அரியலூர், பெரம்பலூர் வழியாக ஆத்தூருக்கு ரெயில் பாதை அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கிட மத்திய அரசை கேட்டுக்கொள்வது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். அதிக அளவில் வேலை வாய்ப்புள்ள கட்டுமான துறையில் மூலப்பொருட்களான மணல், சிமெண்டு, ஜல்லி, கம்பி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெரம்பலூர் பாலக்கரை முதல் தீரன் நகர் எதிரே கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் வரை இருபுறமும், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் நலனுக்காக நடைமேடை அமைத்து தர வேண்டும். மத்திய அரசில் காலியாக உள்ள 12 லட்சம் பணியிடங்களையும், தமிழக அரசில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிடும் வகையில் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் சிவக்குமார், பொருளாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story