கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவிலில் உறியடி நிகழ்ச்சி; 5 இடங்களில் நடந்தது

கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு  நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவிலில்  உறியடி நிகழ்ச்சி; 5 இடங்களில் நடந்தது
x

உடையப்பன்குடியிருப்பு நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு 5 இடங்களில் உறியடி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்,

உடையப்பன்குடியிருப்பு நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு 5 இடங்களில் உறியடி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ண ஜெயந்தி விழா

நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன்குடியிருப்பு நடுத்தீர்வைப்பதி நாராயண சாமி கோவிலில் அன்புகொடி மக்களால் நடத்தப்பட்டு வரும் கிருஷ்ண ஜெயந்தி விழா, 50-வது பொன் விழா ஆண்டு மற்றும் ஆராட்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு வைத்தியநாதபுரம் அனந்தகிருஷ்ணன் இல்லத்தில் இருந்து ஊர்வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் வழிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதியம் 12 மணிக்கு மாபெரும் அன்னதானமும், 2.30 மணிக்கு பணிவிடையும், மாலை 4 மணிக்கு ஆராட்டு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் யானை முன்பு ெசல்ல முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் உள்பட ஏராளமானோர் அணிவகுத்து சென்றனர்.

ஆராட்டு

ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு கோவில்விளை சந்திப்பு, பிள்ளையார்புரம் சந்திப்பு, மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பு வழியாக சென்று சங்குமான் கடற்கரையில் கிருஷ்ணனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் திரும்பி வரும் வழியில் மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் மாபெரும் உறியடி விழா நடந்தது. தொடர்ந்து தாமரைகுட்டி விளை சந்திப்பு, பிள்ளையார்புரம் சந்திப்பு, கோவில்விளை சந்திப்பு ஆகிய இடங்களில் உறியடி விழா நடந்தது. பின்னர் கோவிலை வந்து அடைந்தவுடன் உறியடி நிகழ்ச்சி நடந்தது. இவ்வாறு மொத்தம் 5 இடங்களில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் உறியடி விழா முடிந்தவுடன் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

உடையப்பன்குடியிருப்பு நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு 5 இடங்களில் உறியடி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துராமன், அய்யப்பன், வீர சூரபெருமாள், நாகர்கோவில் பா.ஜ.க. தெற்கு மண்டல தலைவர் முரளி மனோகர்லால், பா.ஜ.க. வக்கீல் ஆறுமுகம், பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் அருள், நாகர்கோவில் தெற்கு மண்டல பொருளாதாரப் பிரிவு தலைவர் கணேசன், ஆத்திக்காட்டுவிளை ஊராட்சி மன்ற தலைவர் பேரின்ப விஜயகுமார், மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் சி. லிங்கேசன் தலைமையில் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story