உறியடி திருவிழா


உறியடி திருவிழா
x

வள்ளியூர் அருகே சிறுமளஞ்சியில் உறியடி திருவிழா நடைபெற்றது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே சிறுமளஞ்சியில் கண்ணன் சேவா சங்கம் சார்பில் 40-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடி திருவிழா 2 நாட்கள் வெகு விமர்சையாக நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியாக காலையில் கண்ணன் சேவா சங்க கொடியேற்றப்பட்டது. பின்பு சிறுவர் சிறுமியர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. மாலையில் அலமேலு மங்கை சமேத ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பின்பு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாய கண்ணன் வீதி உலா வந்து உறியடி திருவிழா நடந்தது. இரவில் கலை நிகழ்ச்சி நடந்தது. 2-ம் நாளில் விளையாட்டுப் போட்டி, பெண்களுக்கான கோலப்போட்டியும் பாட்டு போட்டு, பேச்சு போட்டி, மாறுவேட போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story