தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தீவனூர்    லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா    திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா நடைபெற்றது.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனம் தாலுகா தீவனூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் என்கிற ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ணஜெயந்தியையொட்டி நேற்று உறியடி திருவிழா நடைபெற்றது. அதன்படி நேற்று காலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு விக்னேஷவரர் ஆராதனை, கோகுலாஷ்டமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் சாமி வீதியுலா மற்றும் திருமஞ்சனமும் நடந்தது. பின்னர் உறியடி திருவிழா நடைபெற்றது. இரவு 9 மணிக்கு லட்சுமி நாராயண பெருமாள் நாடக குழுவினரின் நாடகம் நடைபெற்றது. இதில் வக்கீல் மோகன், பிரபு உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் நாமக்காரர் முனுசாமிகவுண்டர் செய்திருந்தார்.


Next Story