ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் ஊருணி தூர்வாரும் பணி


ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் ஊருணி தூர்வாரும் பணி
x

ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் ஊருணி தூர்வாரும் பணி தொடங்கியது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கிறிஸ்தவ ெதருவில் ஊருணி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் குப்பைகள் தேங்கி, பாசிகள் படர்ந்து துர்நாற்றம் வீசி தொற்று நோய்பரவும் அபாய நிலையில் உள்ளது. அந்த ஊருணியை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.48.30 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. அதற்கு நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கினார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் பூமி பூஜை செய்து வைத்தார். ஆணையாளர் திருமால் செல்வம், நகராட்சி பொறியாளர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற உறுப்பினர் ராக்கம்மாள் வரவேற்றார். இதில் தி.மு.க.வடக்கு நகர் பொறுப்பாளர் ஜீவரத்தினம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story