ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டரின் பயிற்சி நிறைவு


ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டரின் பயிற்சி நிறைவு
x

ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டரின் பயிற்சியினை நிறைவு செய்தது.

சென்னை

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஜாக்சன்வில்லே தளத்தை மையமாக கொண்டு செயல்படும் அந்த நாட்டின் கடற்படைக்கு சொந்தமான 'வி.பி. டிரைடென்ட்' ஹெலிகாப்டர் கடல்மார்க்கமாக ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது தொடர்பான பயிற்சி பெறுவதற்காக கடந்த 22-ந்தேதி அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்துக்கு வந்தது.

கடல்மார்க்கத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் நிபுணத்துவ தகவல்களை பகிர்ந்துகொள்கின்றன. அந்த வகையில், இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர், அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் ஆகியவை இணைந்து இயக்கம் தொடர்பான திட்டமிடல், பராமரிப்பு பயிற்சி உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் இடம் கொடுக்காமல் கடல்சார் பாதுகாப்பினை திறம்பட கையாளசெய்யவேண்டும் என்று இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உறுதி பூண்டுள்ளன. அதன் அடிப்படையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் தனது ஒரு வார பயிற்சியினை நேற்று முன்தினம் நிறைவு செய்தது.

1 More update

Next Story