பயன்பாடற்ற குப்பை வண்டிகள்


பயன்பாடற்ற குப்பை வண்டிகள்
x

திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் பழுதான குப்பை வண்டிகள் பழுது சரி செய்யப்படாமல் பயன்பாடற்ற நிலை யில் கிடக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் பழுதான குப்பை வண்டிகள் பழுது சரி செய்யப்படாமல் பயன்பாடற்ற நிலை யில் கிடக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மண்டல அலுவலகம்

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் 2 மண்டலங்கள் உள்ளன. இதில் தலா 12 வார்டுகள் உள்ளன. 6 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ள திருத்தங்கல் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை அகற்ற போதிய தூய்மை பணியாளர்கள் இல்லை. இதனால் 24 வார்டுகளிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து இருக்கிறது.

இதனை 10 நாட்களுக்கு ஒரு முறையாவது அகற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் சேதுராமன், அ.செல்வம், திருப்பதி, சசிக்குமார், துரைப்பாண்டி உள்ளிட்டவர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பெயரளவுக்கு மட்டும் தான் சுகாதார பணிகள் நடக்கிறது. முழுமையாக நடக்கவில்லை என்று மண்டல தலைவர்கள் குருசாமி, அழகுமயில் பொன்சக்திவேல் ஆகியோர் குற்றம்சாட்டுகிறார்கள்.

வாகனங்கள் பழுது

குப்பைகளை அகற்ற தேவையான தூய்மை பணியாளர்கள் இல்லாத நிலையில் ஒப்பந்த பணியாளர்களை கொண்டும் பணிகளை முழுமையாக செய்யமுடியாத நிலை உள்ளது. தூய்மை பணியாளர்கள் பலர் அலுவலகம் உள்ளிட்ட வேறு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு பதில் மாற்று பணியாளர்களும் நியமிக்கவில்லை.

மேலும் குப்பைகளை அள்ள பயன்படுத்தப்படும் வாகனங்களும் பல மாதங்களாக மண்டல அலுவலகத்தில் முடங்கி கிடக்கிறது. இதனால் திருத்தங்கல் பகுதியில் மழைக்காலத்தில் நோய் பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே திருத்தங்கல் பகுதியில் குவிந்து இருக்கும் குப்பைகளை அகற்ற தேவையான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story