நாமக்கல் உழவர் சந்தையில்தக்காளி விற்பனை நிறுத்தம்பொதுமக்கள் ஏமாற்றம்


நாமக்கல் உழவர் சந்தையில்தக்காளி விற்பனை நிறுத்தம்பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 26 July 2023 7:00 PM GMT (Updated: 26 July 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் உழவர் சந்தை கோட்டை சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கடந்த 2 மாதகாலமாக தக்காளி விற்பனைக்கு வரவில்லை.

எனவே வெளிசந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரங்களில் விளைந்த தக்காளியை வாங்கி வந்து கிலோ ரூ.80 முதல் ரூ.95 வரை விற்பனை செய்து வந்தனர். ஆனால் கடந்த 3 நாட்களாக அங்கும் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டது.

இதனால் நாமக்கல் உழவர் சந்தைக்கு தக்காளி வாங்க வந்த பொதுமக்கள் நேற்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நாமக்கல் உழவர் சந்தையில் விவசாயிகளிடம் தக்காளி விளைச்சல் வரும் வரை தோட்டக்கலை துறை சார்பில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story