நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.7¾ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை


நாமக்கல் உழவர் சந்தையில்  ரூ.7¾ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
x

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 26 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.7¾ லட்சத்துக்கு விற்பனையானது.

நாமக்கல்

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 26 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.7¾ லட்சத்துக்கு விற்பனையானது.

உழவர் சந்தை

நாமக்கல்லில் உள்ள கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்களின் விளை நிலங்களில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமைதோறும் காய்கறி மற்றும் பழங்களின் வரத்து அதிகரிப்பதோடு, விற்பனையும் கூடுதலாக இருக்கும்.

அதன்படி நேற்று நாமக்கல் உழவர் சந்தைக்கு 22 டன் காய்கறிகள் மற்றும் 4 டன் பழவகைகள் என மொத்தம் 26 டன் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தும் ரூ.7 லட்சத்து 89 ஆயிரத்து 680-க்கு விற்பனையானது. இவற்றை 4 ஆயிரத்து 880 பேர் வாங்கி சென்றனர்

விலை விவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.12-க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.44-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.20-க்கும், புடலங்காய் கிலோ ரூ.28-க்கும் விற்பனையானது. பீட்ரூட் கிலோ ரூ.54-க்கும், கேரட் கிலோ ரூ.82-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.70-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.32-க்கும் விற்பனை செய்யப்பட்டன. கடந்த வார்த்தை ஒப்பிடுகையில் கேரட் மற்றும் பீட்ரூட்டின் விலை அதிகரித்து இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story