வீ.கருப்பசாமி பாண்டியன் -தொழில் அதிபர் பி.ஏ.சாமிநாதன் இல்ல திருமண விழா; எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து


வீ.கருப்பசாமி பாண்டியன் -தொழில் அதிபர் பி.ஏ.சாமிநாதன் இல்ல திருமண விழா; எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
x

நெல்லையில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் -தொழில் அதிபர் பி.ஏ.சாமிநாதன் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்.

திருநெல்வேலி

நெல்லையில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் -தொழில் அதிபர் பி.ஏ.சாமிநாதன் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்.

திருமண விழா

நெல்லை பாளையங்கோட்டை திருத்து கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வீ.கருப்பசாமி பாண்டியன்-சரஸ்வதி தம்பதி மகன் வழி பேரனும், வடக்கு விஜயநாராயணம் மடத்தடி வீடு ஏ.ஸ்டாலின் பாண்டியன் -ஜானகி தம்பதி மகள் வழி பேரனும் வி.கே.பி. முத்துராமலிங்கம் -ஜென்னி தமிழரசி தம்பதி மகனுமான எம்.கரணுக்கும்,

கொம்பன்குளம் வைரவம்புதுக்குடி சா.பேச்சிமுத்து தேவர்-அமச்சியார் அம்மாள் மகன் வழி பேத்தியும், சங்கனாங்குளம் தி.ஆறுமுக பாண்டியன் -ஜானகி அம்மாள் தம்பதி மகள் வழி பேத்தியும், சென்னை தொழில் அதிபர் பி.ஏ.சாமிநாதன் -வள்ளி தம்பதி மகளுமான எஸ்.அமச்சியார் என்ற அபிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மாதா மாளிகையில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தாலி எடுத்து கொடுத்து எம்.கரண் -எஸ்.அமச்சியார் என்ற அபி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இன்று வரை அ.தி.மு.க. ஒரு குடும்பமாக செயல்பட்டு வருகிறது. கழகத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் அமைப்பு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

சின்னம் கிைடத்த பிறகு...

அவர் அ.தி.மு.க. வீறு கொண்டு எழுவதற்கும், எம்.ஜி.ஆர். உடன் கட்சி வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். அவரை போல் மூத்த முன்னோடிகள் கட்சிக்காக பாடுபட்டு வருகிறார்கள். இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகு முதல் நிகழ்ச்சியாக இந்த திருமண விழாவில் பங்கேற்று உள்ளேன்.

மணமக்களுக்கு இது பொன்னான நாள் ஆகும். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்நாளில் பொன்னான நாள் திருமண நாள்தான். மணமக்கள் இல்லற வாழ்க்கையை பெற்றோர் மகிழ வாழ வேண்டும். மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து இல்லறத்தை நடத்தி, உற்றார் உறவினர் போற்றும் வகையில் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வீ.கருப்பசாமி பாண்டியன் மற்றும் பி.ஏ.சாமிநாதன் குடும்பத்தினர் திருமண விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றனர்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ, அ.தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., தேர்தல் பிரிவு துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஐ.எஸ்.இன்பதுரை, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன்,

முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், முருகையா பாண்டியன், முன்னாள் எம்.பி.க்கள் முத்துகருப்பன், கே.ஆர்.பி.பிரபாகரன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, மாநில அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.பி. சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சிராணி,

அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஜெரால்டு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், துணை செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் உவரி ஏ.கே.ஏ.ராஜன் கிருபாநிதி, இணைச்செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன்,

பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அம்மா செல்வகுமார், எஸ்.கே.எம்.சிவகுமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் டி.பால்துரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

பா.ஜ.-தி.மு.க.

பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், தி.மு.க. சார்பில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இ.நடராஜன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள், மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் பி.ஏ.சிவசுப்பு, பி.ஏ.மகாராஜன், பி.ஏ.ராஜகோபால், பி.ஏ.பாலமுருகன், தொழில் அதிபர் முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story