காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
வேளாண்மைத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அமைச்சு பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகப்பட்டினம்
நாகையில் தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநிலசெயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சுமதி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமார், மாநில பொருளாளர் ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 15.3.2023 தேசிய உதவியாளர் பதவி உயர்வு பட்டியலை உடன் அங்கீகரிக்க வேண்டும். தோட்டக்கலைத் துறையில் அமைச்சுப் பணியாளர் மாறுதல் மற்றும் நியமனத்தில் விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். நிர்வாக தவறுகள் மற்றும் விதிமுறை மீறல்கள் ஆகியவற்றிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில துணைத்தலைவர்கள், மாநில பொருளாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story