கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x

தர்மபுரி மாவட்டத்தில் 2,024 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஆணைப்படி தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு 33-வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்பட 2,024 இடங்களில் நடைபெற உள்ளது. 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு சுகாதார மையங்களுக்கு சென்று தவறாது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாமல் வருவோருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்படும். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த சோதனை முடிவு வரும் வரை தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story