தர்மபுரி மாவட்டம் முழுவதும் 2,214 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நேரில் ஆய்வு


தர்மபுரி மாவட்டம் முழுவதும்   2,214 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்  சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நேரில் ஆய்வு
x

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 2,214 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 2,214 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தடுப்பூசி முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் பொது இடங்கள் என மொத்தம் 2,214 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது.இந்த முகாம்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் என அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

துணை இயக்குனர் ஆய்வு

இந்த நிலையில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் தர்மபுரி, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்முடி, கடத்தூர், கம்பைநல்லூர், பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பூசி செலுத்தும் முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் பொது மக்கள் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்து வருவதை சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

மாவட்டம் முழுவதும் நடந்த முகாம்களில் 20, ஆயிரத்து 26 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.


Next Story