1,346 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


1,346 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,346 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. பேரண்டபள்ளியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

கொரோனா தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 1,346 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரண்டபள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனை உள்பட மொத்தம் 1,346 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் 2,24,510 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 53,700 கோவேக்சின் தடுப்பூசிகளும், 3,120 கார்பிவேக்ஸ் தடுப்பூசிகளும் என மொத்தம் 2,81,330 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.

கட்டாயம் முக கவசம்

தடுப்பூசி செலுத்தி கொள்வதன் மூலம், தீவிர நோய்த்தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம். இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டு பொதுமக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

மேலும், பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், வெளியிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, டாக்டர் ராகவேந்திர குமார், வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜாமணி மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story