இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்


இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:45 PM GMT)

இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை பாரதிநகரில் கால்நடை பராமரிப்பு துறை தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கல்லூர் ஊராட்சி தலைவர் கஸ்தூரி சுப்பிரமணியன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் திருவாடானை கல்லூர் பாரதிநகர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து திருவாடானை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கலா தலைமை தாங்கினார். இதில் மாணவிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் ராமநாதபுரம் கோட்ட உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், நோய் புலனாய்வு உதவி இயக்குனர் நேரு குமார், கால்நடை மருத்துவர்கள் சவுந்தர்யா, பெரியண்ணன், கால்நடை ஆய்வாளர் பாண்டியம்மாள், உதவியாளர் கண்ணதாசன், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story