கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்
வருகிற 1-ந் தேதியிலிருந்து கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
சிவகங்கை
கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மத்திய, மாநில அரசின் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீ்ழ் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 1-ந் தேதியிலிருந்து 21 நாட்கள் தொடர்ச்சியாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட உள்ளது.
அனைத்து கால்நடை வளர்ப்போர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி தடுப்பூசியினை செலுத்தி, கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story