கால்நடைகளுக்கு இன்று தடுப்பூசி முகாம்


கால்நடைகளுக்கு இன்று தடுப்பூசி முகாம்
x

கால்நடைகளுக்கு இன்று தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

கரூர்

கன்று வீச்சு நோய் ப்ளூசெல்லா எனும் நுண்ணுயிரினால் ஏற்படும் நோயாகும். இந்நோய் பாதித்த கால்நடைகளில் மலட்டுத்தன்மை ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் கன்று ஈனாத நிலை ஏற்படும். இந்நோய் கால்நடைகளுக்கு பரவாமல் இருக்க கன்று வீச்சு நோய் தடுப்பூசி 1 லட்சம் டோஸ்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களிலும், கால்நடை மருத்துவமனைகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. எனவே இதற்கான தடுப்பூசி இன்று (புதன்கிழமை) முதல் 28-ந் தேதி வரை கரூர் மாவட்டத்தில் கால்நடை நிலையங்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் போடப்பட உள்ளன.

இந்த தடுப்பூசி 4 முதல் 8 மாத கிடேரி கன்றுகளுக்கு மட்டுமே போடக்கூடியது. தடுப்பூசி கால்நடைகளின் வாழ்வில் இளம் வயதில் மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பூசியாகும். எனவே கால்நடை வளர்ப்போர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story