450 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி


450 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
x

ஆராஞ்சியில் 450 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

ஆராஞ்சியில் 450 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள ராமநாதபுரம், அஸ்தினாபுரம், குமாரகுடி, குமாரகுடி புதூர் ஆகிய ஊர்களுக்கான கால்நடை மருத்துவ முகாம் ஆராஞ்சி கிராமத்தில் நடந்தது. முகாமிற்கு ஆராஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் விஜயா சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சிஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

சோமசிபாடி கால்நடை உதவி மருத்துவர் பாண்டியன் தலைமையில் கால்நடை ஆய்வாளர் குணசேகரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் உஷா பிரியா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு 450-க்கும் மேற்பட்ட பசுக்கள், கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது கால்நடை வளர்ப்போருக்கு கால்நடைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்த ஆலோசனைகளையும் மருத்துவ குழுவினர் வழங்கினர்.


Next Story