கால்நடை மருத்துவ முகாமில் 450 கால்நடைகளுக்கு தடுப்பூசி


கால்நடை மருத்துவ முகாமில் 450 கால்நடைகளுக்கு தடுப்பூசி
x

சாணிப்பூண்டி கிராமத்தில் நடந்த சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 450 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

திருவண்ணாமலை

வேட்டவலம்

சாணிப்பூண்டி கிராமத்தில் நடந்த சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 450 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

வேட்டவலத்தை அடுத்த சாணிப்பூண்டி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் உண்ணாமலை முன்னிலை வகித்தார்.

முகாமில் கால்நடை மருத்துவர் ராஜ்குமார் வரவேற்றார். இதில் கால்நடை மருத்துவர் ராஜ்குமார் தலைமையில் கால்நடைஆய்வாளர் பழனிவேலு மற்றும் செயற்கை முறை கருவூட்டாளர் சிவானந்தம் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் 450-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலடு நீக்கம், சுண்டுவாத அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

மேலும் சிறந்த கிடாரிக்கன்றுகளை வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முடிவில் செயற்கை முறை கருவூட்டாளர் ஏழுமலை நன்றி கூறினார்.


Next Story