கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி


கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி
x

திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை ஆஸ்பத்திரிகளிலும், புரூசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த புரூசெல்லோசிஸ் எனப்படும் நோய்க்கான தடுப்பூசி,தற்போது 4 முதல் 8 மாதம் வரை வயதுள்ள கிடேரி கன்றுகளுக்கு மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்திக் கொண்டால் அந்த கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதற்குமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இந்த தடுப்பூசி திட்டமானது ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒரு முறை 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு செலுத்தப்படவுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story