உலக வெறி நோய் தடுப்பு தினத்தையொட்டி நாய்களுக்கு தடுப்பூசி


உலக வெறி நோய் தடுப்பு தினத்தையொட்டி நாய்களுக்கு தடுப்பூசி
x

உலக வெறி நோய் தடுப்பு தினத்தையொட்டி நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு அரியலூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செல்ல பிராணிகளுக்கு நடந்த இலவச வெறி நோய் தடுப்பூசி முகாமினை கலெக்டர் ரமணசரஸ்வதி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3,850 வெறி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4,500 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடையே வெறி நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். நாய் கடித்தவுடன் உடனடியாக உரிய மருத்துவ ஆலோசனை பெறுதல், எக்காரணம் கொண்டும் சுய மருத்துவம் அல்லது நாட்டு மருத்துவ முறைகளை மேற்கொள்ளாதிருத்தல் ஆகியன வெறி நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான முதல் படியாக அமையும், என்றார். இதில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ஹமீது அலி, கால்நடை மருத்துவர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story