34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x

சேலம் மாவட்டத்தில் 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

சேலம்

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் இதுவரை 33 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 8 லட்சத்து 23 ஆயிரத்து 235 பேருக்கு முதல் தவணையும், 13 லட்சத்து 25 ஆயிரத்து 565 பேருக்கு 2-ம் தவணையும், 97 ஆயிரத்து 162 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் என மொத்தம் 22 லட்சத்து 45 ஆயிரத்து 962 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் சிறப்பு முகாமை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story