வெறிநோய் தடுப்பூசி முகாம்
வெறிநோய் தடுப்பூசி முகாம் போடப்பட்டது.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கீழையூர் ஒன்றிய அளவிலான வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விலங்குகள் வதை தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் மீனம்பநல்லூர் ஊராட்சி திருமணங்குடியில் நடந்தது. முகாமில் மண்டல இணை இயக்குனர் விஜய்குமார், உதவி இயக்குனர் ஆசான்இப்ராஹிம், ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா வெற்றிமுரசு மற்றும் கால்நடை டாக்டர்கள் கவின், சரவணன், கால்நடை ஆய்வாளர் அன்பிற்கரசி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் விமலா, தேவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பொது மக்களின் வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினர். மேலும் கால்நடைகள் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story