பீமா கிராம திட்டத்தில் வடகவுஞ்சி தேர்வு


பீமா கிராம திட்டத்தில் வடகவுஞ்சி தேர்வு
x
தினத்தந்தி 11 Aug 2023 1:45 AM IST (Updated: 11 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி.யின் பீமா கிராம திட்டத்திற்கு கொடைக்கானல் வடகவுஞ்சி கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

எல்.ஐ.சி. நிறுவனம் சார்பில், பீமா கிராம திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அதிக பாலிசிதாரர்கள் காப்பீடு செய்துள்ள கிராமம் தேர்வு செய்யப்படும். அந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளை எல்.ஐ.சி. மேற்கொள்ளும். அதன்படி தற்போதைய நிதியாண்டில் அதிக பாலிசிதாரர்கள் காப்பீடு செய்துள்ள கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சி கிராமம், பீமா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அங்கீகார சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கொடைக்கானலில் நடந்தது. இதில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் முதுநிலை கோட்ட மேலாளர் நாராயணன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வணிக மேலாளர் முத்தையன், விற்பனை மேலாளர் லூர்து செல்வகுமார், கிளை மேலாளர் மணவண்ணன், உதவி மேலாளர் இளஞ்செழியன், வளர்ச்சி அதிகாரி ஆல்வின், கிராம தலைவர் சந்திரசேனன், வடகவுஞ்சி ஊராட்சி துணை தலைவர் சிவபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முகவர் கற்பகவல்லி அழகுராஜா நன்றி கூறினார்.


Next Story