வடமாடு மஞ்சுவிரட்டு
வடமாடு மஞ்சுவிரட்டு
சாயல்குடி
கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் அய்யனார், கருப்பசாமி, ஏகநாதர் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் ஒரு காளையை அடக்க தலா 9 பேர் வீதம் பங்கேற்றனர். இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, திருச்சி , புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். தலா 25 நிமிடங்கள் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு காளைகள் களத்தில் விடப்பட்டன. ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் ரொக்கப் பணம், நினைவு பரிசு, சில்வர் அண்டா, கட்டில், சேர் பரிசுகளாக வழங்கப்பட்டது. வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை முதுகுளத்தூர் கடலாடி, சாயல்குடி, கமுதி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்து சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், விழா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.