திருவரங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு
திருவரங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
திருவரங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டை அமைச்சர் மெய்ய நாதன் தொடங்கி வைத்தார். இதில் திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 11 காளைகள் கலந்து கொண்டன. இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டுப்போட்டு கொண்டு வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் துள்ளிக்குதித்து ஓடியது. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அமைச்சர் பரிசுகளை வழங்கினார். மஞ்சுவிரட்டில் திருவரங்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அரு வடிவேல் மற்றும் திருவரங்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.