சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே 10-ம் தேதி வைகை மற்றும் பல்லவன் ரெயில்கள் ரத்து


சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே 10-ம் தேதி வைகை மற்றும் பல்லவன் ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 8 Oct 2023 11:17 AM IST (Updated: 8 Oct 2023 11:20 AM IST)
t-max-icont-min-icon

சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே வரும் 10-ம் தேதி வைகை மற்றும் பல்லவன் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே வரும் 10-ம் தேதி வைகை மற்றும் பல்லவன் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் சென்னை எழும்பூர் ரெயில்நிலையத்தில் இருந்து தொடங்கி தாம்பரம் வழியாக செல்கின்றன. இந்நிலையில் எழும்பூர் ரெயில்நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை வைகை மற்றும் பல்லவன் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் அறிவித்து உள்ளது.

சென்னை பரங்கிமலை ரெயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வைகை எக்ஸ்பிரஸ் தாம்பரம்- மதுரை மற்றும் மறுமார்க்கமாக மதுரை - தாம்பரம் இடையே இயக்கப்படும். மேலும் பல்லவன் எக்ஸ்பிரஸ் காரைக்குடி-தாம்பரம் மற்றும் மறுமார்க்கமாக தாம்பரம்-காரைக்குடி இடையே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story