விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா
விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருதுநகர்,
விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
விருதுநகரில் பிரசித்தி பெற்ற வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, தீப ஆராதனைகள் நடைபெற்றது.
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
விழாவினையொட்டி அம்மன் தினமும் தங்க குதிரை, வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். வருகிற 7-ந் தேதி பொங்கல் திருவிழா நடைபெறுகிறது.
8-ந் தேதி கயிறு குத்து, அக்னிச்சட்டி திருவிழாவும், 9-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 12-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.