லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி மாத வசந்த உற்சவம்


லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி மாத வசந்த உற்சவம்
x

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி மாத வசந்த உற்சவம் தொடங்கியது.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் வைகாசி மாதம் நடைபெறும் 7 நாள் வசந்த உற்சவம் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தோசிதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கொண்ட பாளையத்தில் உள்ள வசந்த மண்டபத்திற்கு மங்கள வாத்திரங்களுடன் சுவாமி கிளி கூண்டு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வசந்த உற்சவம் 5 நாள் கொண்டபாளையத்திலும், இரண்டு நாள் ஊர்கோவிலிலும் நடைபெறும்.

1 More update

Related Tags :
Next Story