சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாக திருவிழா


சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாக திருவிழா
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM GMT (Updated: 24 May 2023 6:45 PM GMT)

திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அனுக்ஞை, வாஸ்து சாந்தி, விக்னேஸ்வர பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்கள் கொடி மரத்திற்கு எழுந்தருளினர். சுவாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றது. கொடி மரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகமும், சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களோடு மேளதாளங்கள் முழங்க சுவாமி சன்னதியில் கொடியேற்றம் நடைபெற்றது. நந்தீஸ்வரர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.

பின்னர் சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பூஜைகளை ரவி குருக்கள், தியாகராஜ குருக்கள், சந்திரசேகர குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தினர். தொடர்ந்து ராஜமரியாதை நாட்டார் மரியாதை வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன், நாட்டார்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலையில் மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சியும், ஐம்பெரும் தெய்வங்கள் எந்திர விமானத்தில் திருவீதி உலா மற்றும் வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை. மாலையில் சுவாமி, அம்மன் பரிவார தெய்வங்களுடன் வீதிஉலா நிகழ்ச்சிகளும், முக்கிய நிகழ்ச்சியாக 1-ந் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.


Next Story