அனலாடீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா


அனலாடீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
x

அனலாடீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது.

திருச்சி

தொட்டியம்:

தொட்டியத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 23-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மறுநாள் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பல்லக்கு, நந்திகேஸ்வரர், அன்ன வாகனத்தில் சந்திரசேகர், இந்துவள்ளி எழுந்தருளி வீதியுலா வந்தனர். நேற்று முன்தினம் காலை சோமாஸ்கந்தர் பல்லக்கிலும், இரவில் சோமாஸ்கந்தர், அம்பாள் கைலாச வாகனம் மற்றும் காமதேனு வாகனத்தில் எழுந்தருள திருவீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற ஜூன் 1-ந் தேதி காலை நடைபெற உள்ளது.

1 More update

Next Story