வைகாசி விசாக பிரமோற்சவ விழா தேரோட்டம்
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ விழா தேரோட்டத்தை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் முதலாம் ஆண்டு வைகாசி விசாக பிரமோற்சவ விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம், மகா தீபாராதனையும், மலையடிவாரத்தில் சிறப்பு யாக பூஜையுடன் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் காலை, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.
9-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து கோவில் பரம்பரைஅறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார். மலையை சுற்றி வலம் வந்த தேரை திரளான பக்கர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த விழாவில் கலவை சச்சிதானந்தசுவாமி, சித்தஞ்சி மோகனந்தசுவாமி, அரசு அதிகாரிகள் மற்றும் உபயாதரர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
====