இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பா.ஜ.க.வை ஆட்சி பீடத்திலிருந்து அகற்ற வேண்டும் -வைகோ வலியுறுத்தல்


இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பா.ஜ.க.வை ஆட்சி பீடத்திலிருந்து அகற்ற வேண்டும் -வைகோ வலியுறுத்தல்
x

‘பாரதம்’ என்று மாற்ற முயற்சி: இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பா.ஜ.க.வை ஆட்சி பீடத்திலிருந்து அகற்ற வேண்டும் வைகோ வலியுறுத்தல்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாரதம் என்று இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான முயற்சி என்பது இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் அத்தியாயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மோடி அரசு இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்றுவதற்கு முனைந்திருக்கிறது. இது கடும் கண்டனத்துக்கு உரியது.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது ஒன்றுதான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே வழி ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story