வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து உற்சவத்தின் 9-ஆம் திருநாள்...!
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் 9-ம் திருநாள் உற்சவம்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 9-ம் நாளான இன்று 'முத்துக்குறி' பாசுரத்திற்கு ஏற்ப நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை, முத்துகலிங்கு ஆபரணம், முத்தங்கி, முத்து அபயஹஸ்தம், முத்து திருவடி, முத்து ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி.
மேலும், பகல் பத்தின் கடைசி நாளான ஜனவரி 1ஆம் தேதி (நாளை) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறாா். அதனைத் தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 2-ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரம பதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story