பரவி வரும் வைரஸ் காய்ச்சல்
பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கீழக்கரை,
கீழக்கரை நகராட்சி பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் அவதிப் அடைந்து வருகின்றனர்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் கை, கால் களை முடக்கி படுக்கையில் போட்டு விடுவதாகவும் மேலும் தொடர் இருமல் ஒருவருக்கு வந்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த காய்ச்சல் பரவி விடுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வெளியூருக்கு சென்று சிகிச்சை பெற முடியாமலும் சிரமம் அடைகின்றனர். எனேே கீழக்கரையில் அனைத்து தெருக்களிலும் சுகாதாரத் துறையினர் 21 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் காய்ச்சல் ஏற்படுவ தால் அதில் இருந்து மீள கீழக்கரையில் ஆங்காங்கே உடைந்து ஓடக்கூடிய சாக்கடை நீரை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.