வைத்தீஸ்வரன் கோவில் வைகாசி தேரோட்டம்
வலங்கைமான் அருகே வைத்தீஸ்வரன் கோவில் வைகாசி தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வலங்கைமான்:
வலங்கைமான் அருகே வைத்தீஸ்வரன் கோவில் வைகாசி தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வைத்தீஸ்வரன் கோவில்
வலங்கைமான் பாய்க்காரர் தெருவில் ஐம்பெரும் தலங்களில் ஒன்றான தையல் நாயகி வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. மிக பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவையொட்டி கோவிலில் வைத்தீஸ்வரன், தையல் நாயகி தட்சிணாமூர்த்தி, விநாயகர், துர்க்கை, நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தேரோட்டம்
காலை 8 மணிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் வைத்தீஸ்வரன் மற்றும் தையல்நாயகி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் மேல அக்ரஹாரம், தெற்கு அக்ரஹாரம், கடக்க அக்ரஹாரம் உள்ளிட்ட வீதிகள் வழியாக சென்றது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது.