வாளவாடி-மொடக்குபட்டி இணைப்பு சாலை அமைக்கும் பணி தீவிரம்


வாளவாடி-மொடக்குபட்டி இணைப்பு சாலை அமைக்கும் பணி தீவிரம்
x
திருப்பூர்


உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் பெரிய வாளவாடி ஊராட்சி உள்ளது. இந்தப்பகுதியில் சின்னவாளவாடி, பெரியவாளவாடி, பழையூர் கிராமங்கள் உள்ளன. இதில் சின்ன வாளவாடி கிராமத்திற்கு உட்பட்ட வாளவாடி- சர்க்கார்புதூர் சாலையில் இருந்து மொடக்குப்பட்டி ஊராட்சிக்கு இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலையின் மூலமாக விவசாயிகள் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கும், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும், தோட்டத்து சாலையில் குடியிருந்து வரக்கூடிய பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர். பயண நேரம் குறைவு, எரிபொருள் செலவு மிச்சம் என்பதால் 2 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் இணைப்பு சாலை சேதம் அடைந்தது. அதைத்தொடர்ந்து சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள், விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் சுமார் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை சீரமைப்பு பணி தொடங்கியது. முதல் கட்டமாக பொக்லைன் எந்திரத்தின் மூலமாக சாலை சமன்படுத்தப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. அதன் பின்பு மண்ணைக்கொட்டி எந்திரத்தின் மூலம் சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் வடகிழக்கு பருவமழை முன்பு சாலை பணியை விரைந்து முடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.


Next Story