இன்று காதலர் தினம் கொண்டாட்டம் - காதலர்களுக்கு இடையூறு செய்பவர்களை கைது செய்ய வேண்டும் -டிஜிபி அலுவலகத்தில் மனு..!


இன்று காதலர் தினம் கொண்டாட்டம் - காதலர்களுக்கு இடையூறு செய்பவர்களை கைது செய்ய வேண்டும் -டிஜிபி அலுவலகத்தில் மனு..!
x

தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் (வாலன்டைன்ஸ் டே) கொண்டாடப்பட்டு வருகிறது.சமீப காலமாக உலகம் முழுவதும் காதலர் தினம் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த'நிலையில் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில் , காதலர் தினத்தை முன்னிட்டு சமூக விரோதிகள் சிலர் காதலர்களை, தாக்குவது, காதலுக்கு எதிராக சமூகவிரோத செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடவுள்ளனர். காதலர்களுக்கு இடையூறு செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story