வள்ளி கும்மியாட்டக் கலை


வள்ளி கும்மியாட்டக் கலை
x

வள்ளி கும்மியாட்டக் கலை

திருப்பூர்

குண்டடம்

குண்டடம் அடுத்த ஒட்டபாளையத்தில் கருப்பண்ணசாமி கன்னிமார் சாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்தினம் இரவு சுமார் 300-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் வள்ளி கும்மியாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இது குறித்து சங்கிலி கருப்பண்ணசாமி வள்ளி கும்மி கலை குழுவின் கும்மியாட்ட பாடகர்கள் ராசு மற்றும் குமார் கூறியதாவது :-

கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மியாட்டக் கலை புத்துயிர் பெற்று வருகிறது. பண்டைக் காலத்தில் கும்மி ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது. கால மாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களைக் கொண்டே வந்துள்ளது. கோவில் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்துக் கும்மியடிக்கின்றனர். நாட்டுப் புறப்பாடல்களும், பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் கும்மியடிக்கும்போது பாடப்படுவதுண்டு. அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் கும்மி பற்றிய குறிப்புகள் உள்ளன. திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி, செல்போன் வளர்ச்சியாலும், மேற்கிந்திய இசையான பேண்டு வாத்தியம், இன்னிசை கச்சேரி போன்றவற்றாலும் வள்ளி கும்மி மீது மக்களுக்கு நாட்டம் குறைய தொடங்கியது. அழிந்து வந்த கும்மி ஆட்டக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில், திருப்பூர், கோவை ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மியாட்டம் கலை பயிற்சியை ஒரு சில ஆசிரியர்கள் இலவசமாக அளித்து வருகின்றனர்.

கேரளா செண்டை கலையை வளர்க்கும் வகையில் அதனை சொல்லி கொடுக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது. அப்பயிற்சி பெற விரும்புவோருக்கு ஊக்கத்தொகையை அம்மாநிலம் வழங்கி வருகிறது. அதேபோல் தமிழ்நாடு அரசும் கும்மி ஆட்டத்தை மேம்படுத்தும் வகையில், ஆட்ட கலைஞர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

இதில் சடையபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன்,

சந்திரசேகர குழுக்கள், சண்முக சுந்தர சிவம், தினேஷ் சிவம் ஆகியோர் கோவில் கும்பாபிஷேகத்தை செய்து வைத்தனர், சமூக ஆர்வலர் சிங்காரிபாளையம் செல்வராசு பொதுமக்கள் பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

----------

3 காலம்


Next Story